Sunday, September 5, 2010

கண் மணியே பேசு - 7 ( நிறைவு பகுதி)

"என்னது சாவித்திரியா? "

"யெஸ் மிஸ்டர் கணேஷ். அன்னைக்கு உங்க கூட பாத்தேனே அந்த ஆளுங்க கிட்ட விசாரிச்சதுல எல்லா உண்மையும் தெரிய வந்துச்சு "

"வாட் நான்சென்ஸ் மிஸ்டர் இளமாறன்"

"நடந்தத நான் சொல்றேன். நிர்மலாவ மயக்க நீங்க கொண்டு போன கர்சீப்ல க்ளோரோபார்ம்கு பதிலா விஷத்த கலந்தது, அப்புறம் பிணத்த பாண்டிசேரி கொண்டு போனது எல்லாம் உங்க மனைவி சாவித்திரியோட வேலை "

"வாட். என் சாவித்திரியா "

"யெஸ். அரெஸ்ட் பண்ணி விசாரிக்க இப்ப இருக்க சாட்சியங்கள் போதுமானதாக இருக்கு ஆனா இன்னும் நிர்மலாவோட பிணத்த கண்டுபிடிக்க முடில. அது இருந்த இடத்துல இருந்து நம்ம அங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடி யாரோ தோண்டி எடுத்துட்டு போயிருக்காங்க "

சாவித்திரி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கினாள்.

"ஏங்க நான் அப்பாவி . இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க சொல்ற அடியாட்கள நான் பாத்தது கூட கெடையாது. ஏங்க நீங்க சொல்லுங்க" கணேஷை ஏறிட்டாள் சாவித்திரி. கணேஷ் அவளை நம்புவதாக தெரியவில்லை .

இளமாறன் தொடர்ந்தார். "மேடம் உங்களுக்கு எதிரா எல்லா விட்னசும் ஸ்ட்ராங்கா இருக்கு. நீங்க விசாரணைக்கு ஒத்துழைச்சு தான் ஆகணும் "

அதற்கு மேல் முரண்டு பிடிக்க சாவித்திரி விரும்பவில்லை. "நான் வரேன் ஆனா என் வக்கீலும் என்னோட வருவார்"

வரலாம் என தலையசைத்த இளமாறனை இருவரும் பின் தொடர்ந்து சென்றனர்.

கணேஷ் நடந்தவைகளில் இருந்து விலகி சுதாரிக்கும் முன் செல்போன் ஒலித்தது .

"மிஸ்டர் கணேஷ் நாங்க அந்த பிணத்த அப்புறபடுத்திட்டோம். மேற்கொண்டு பேச வேண்டியது பேசலாமா"

"பிணத்த என்ன பண்ணீங்க? "

"ஒரு டுப்ளிகேட் டெத் சர்டிபிகேட் ரெடி பண்ணி ஊருக்கு வெளிய இருக்க ஒரு எலெக்ட்ரிக் சுடுகாட்ல எரிச்சிடோம். கண்டு பிடிக்க வாய்ப்பே இல்ல"

"பென்டாஸ்டிக் "

"நாங்க இப்ப உங்கள சந்திக்கணுமே "

"மேற்கொண்டு என்ன பேசணும்"

"உங்களுக்கு தெரியாது. உங்க மனைவி எங்க கிட்ட பேசிருக்காங்க. உங்கள பாலோ பண்ணி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருந்தா பத்து லட்சம் தரதா சொன்னாங்க "

"வாட் "

"ஆமா. நீங்க எதோ பிரச்சனைல மாட்டிருக்கதா அவுங்களுக்கு தோணுச்சு. நாங்க உங்களுக்கு தெரியாம உங்கள பின் தொடர்ந்த போது தான் எல்லாம் தெரிஞ்சது"

கணேஷிற்கு தலை சுற்றியது. சாவித்திரி எத்தனை நல்லவளாக இருந்திருக்கிறாள். சாவித்திரியின் நினைவுகள் கணேஷை மேலும் சோகமாக்கி சில மணிகளை உள் வாங்கியது .

"ஏங்க! ஏங்க! . " சாவித்திரியின் குரல் கனவுகளில் ரீங்காரமிட்டு கொண்டே நிஜத்திலும் ஒலித்தது.

ஆயிரம் மின்மினி பூச்சிகள் ஒருசேர கும்மிரிட்டில் வெளிவந்தது போன்ற பிரகாசம் கலந்த ஆச்சர்யம் கணேஷின் முகத்தில் .

"ஏம்மா வந்திட்டியா .. நான் பயந்தே போய்ட்டேன்"

"ஒண்ணும் பிரச்சன இல்லைங்க . அந்த அடியாளுங்க யாரோ ஒரு பொண்ணு என் பேர சொல்லி பேசுனதா சொல்லிருகாங்க. இந்த இளமாறன் என்ன விசாரிச்சு கேள்வி கேட்ட உண்மை தெரிஞ்சிடும்னு
நினைச்சாரு . நல்ல வேல வக்கீல் ராமநாதன் இருந்தது நால பிரச்சன இல்லாம முடிஞ்சது "

"அப்ப அந்த அடியாளுங்க "

"இனி அவுங்க என்ன சொன்னாலும் எடுபடாது. பிணம் கெடைக்ற வரைக்கும் அவனுங்க கொலை பண்ணத ஒத்துக்க போறது இல்ல. பிணமும் கிடைக்க போறது இல்ல" சாவித்திரி சிரித்தாள்.

"அப்ப வக்கீல் வந்தது, நீ பேய் வந்த மாதிரி கிடந்தது எல்லாம் "

"மன்னிக்கணும் கணேஷ் . நடந்தது எல்லாம் உங்க நல்லதுக்கு தான். உங்க செல்போன் உரையாடல்களை நான் ஒட்டுகேட்டேன். நீங்க பெரிய பிரச்சனைல மாட்ட போறத உணர்ந்தேன். அதோட விளைவு தான் அந்த பேய் நாடகமும் சரியான நேரத்துல வக்கீல் வந்ததற்கான காரணமும்"

"சத்தியமா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி" கணேஷ் மனமார்ந்து கூறினான்.

எரியூட்டப்பட்ட நிர்மலாவுடன் சேர்த்து இரண்டு உயிர்களுக்கும் கணேஷும் சாவித்திரியும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அந்த வீட்டின் ஏதோ ஒரு மூலையில் க்ளோரோபார்ம் பாட்டிலில் விஷமும் , கணேஷின் கல்லூரியின் பல குரல்களில் பேசி வென்ற சான்றிதழ்களும் அமைதியாய் இருந்தன.

(முற்றும்)

கதையின் முடிவின் குழப்பங்களுக்கு விடை:

சாவித்திரியின் பார்வையில்
---------------------------------------------------------------
கணேஷ் நிர்மலா தொடர்பு மறைமுகமாக கதையில் உள்ளது. சாவித்திரி அதை அறிந்து நிர்மலாவை கணேஷ் மூலமாகவே கொலை செய்து அவரை அவளிடம் இருந்து பிரித்தாள். கணேஷிற்கு தன் மீது மனபூர்வமான நம்பிக்கை வர வேண்டுமென்று அந்த கொலை பழியில் இருந்து அவரை விடுவிக்க முயற்சி எடுத்தாள். அது அவரே உணர்ந்து தன்னிடம் திரும்பி வருமாறு செய்தாள்

கணேஷின் பார்வையில்
------------------------------------------
கணேஷ் தன் அடியாட்களுக்கு பெண் குரலில் பேசி அது சாவித்திரி தான் என்ற சந்தேகத்தை அவர்களுக்கும், பின் போலீசிற்கும் ஏற்பட செய்தார். தான் இதில் இருந்து தப்பிக்க சாவித்திரியை காட்டிகுடுக்க தயங்காத கணேஷ் , சாவித்திரியின் தேர்ந்த திட்டத்தால் தன் திட்டம் தோற்று சாவித்திரியிடம் தஞ்சமடைந்தார்.

பி. கு : கதையில் பல விஷயங்களை நேரடியாக சொல்லாமல் விட்டதால் சற்று குழப்பமாகிவிட்டது. மன்னிக்கவும். படிப்பவர்களும் எழுதுபவர்களும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை என்ற என் தவறை இந்த கதை உணர்த்தியது. அடுத்த கதைகளில் தவறுகளை தவிர்க்க முயல்கிறேன். நன்றி.

4 comments:

அருண் said...

நல்லாயிருக்கு,பட் கடைசி பரா கொஞ்சம் குழப்பமா இருக்கு,நா மறுபடியும் வாசிக்கிறேன்.

மனுநீதி said...

அருண், மறுபடியும் ஒரு தடவ படிச்சு பாருங்க. அபபவும் குழப்பமா இருந்தா நான் தெளிவுபடுத்த இன்னும் ஒரு பத்தி சேர்த்துடுறேன். வெளிப்படையா சொல்ல வேண்டாமுன்னு தான் அந்த கடைசி ரெண்டு லைன்ல முடிவ சொல்லிருந்தேன் ஆனா அது எல்லாருக்கும் சரியாய் புரியறது கஷ்டம்னு இப்ப தான் தோணுது.

Venu said...

திகில் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து இருந்தது.நல்ல நடை,வாழ்த்துக்கள். ஆனால் சற்று குழப்பமாகவே இருப்பதாகவே நானும் உணர்கிறேன்,இரண்டு மாதங்களுக்கு இந்த தொடர் வியாபித்து இருந்ததால் இது ஏற்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

மனுநீதி said...

@Venu - இரண்டு மாதங்கள் இழுத்ததிற்கு நேரமின்மையே காரணம். அடுத்த முறை அனைத்து பகுதியையும் எழுதிய பிறகு ஒவ்வொன்றாக பதிவிட முயல்கிறேன். முடிவை இன்னும் ஒரு பத்தி சேர்த்து கொஞ்சம் தெளிவாக்குகிறேன்.

படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கும் புரியலனா மாத்தி தான ஆகணும் :D

அப்புறம் உங்க ப்ளாக்ல பூனை தூங்குது போல :)

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)