Monday, February 16, 2009

மரண வியூகம் - பகுதி 1

அந்த நிசப்தமான இரவில் காற்றில் இலைகள் ஆடும் சத்தம் கதிரவனின் மனதில் ஒரு கிலியை உண்டு பண்ணி கொண்டிருந்தது. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த பங்களாவின் பின்பக்க மதில் சுவர் ஏறினான்.

வீட்டின் முன்பக்கமாக கட்டப்பட்டிருந்த நாய்கள் நாக்கில் எச்சில் தெறிக்க குரைத்து கொண்டிருந்தன. தன் நண்பன் குலசேகரனை கொண்டு அவற்றை திசைதிருப்பிய பெருமிதம் கதிரவனின் முகத்தில் தெரிந்தது.
இது வரை எல்லாம் திட்டம் போட்டபடி நடக்கின்றது, அடுத்து மாடி அறைக்குள் நுழைய வேண்டும் கதிரவன் மனதிற்குள் நினைத்து கொண்டான். திட்டமிட்டபடி கயல்விழி மாடி அறையிலிருந்து கயிற்றை தொங்க விட்டிருந்தாள். மெதுவாக கயிற்றை பிடித்து மேலே ஏற துவங்கினான் கதிரவன்.

நேற்று நடந்தது.....

"கதிரவன் நம்ம காதல் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுடுச்சு"

"என்னைகிருந்தாலும் தெரிய வேண்டியது தான"

"நீங்க நெனைக்கிற மாதிரி அது அவளோ ஈசியான விஷயம் இல்ல.. எங்க அப்பா ரொம்ப மோசமானவரு"

"சரி இப்ப என்ன பண்ணலாம்"

"நாம ஊர விட்டு ஓடி கல்யாணம் பண்ணிக்கறத தவற வேற வழி இல்ல"

"எனக்கு ஒரு நாள் டைம் கொடு.. நான் பணத்த கொஞ்சம் ரெடி பண்ணிக்கிறேன்.. நாளைக்கு நைட் நாம ஓடி போலாம்"

"சரி.. நான் பின்பக்க சுவர் வழியா வெளிய வந்து வெயிட் பண்றேன்"

"சரி.. சரியா பன்னெண்டு மணிக்கு அங்க வந்துடனும் .. நான் குலசேகரனோட அங்க வரேன்.. அவன் நம்மள கார்ல பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணிடுவான்"

"சரி"

நிகழ்காலம்...

வெளியே வந்து வெயிட் பண்றேன் என்று சொன்ன கயல்விழி ஏன் வரவில்லை என்ற கேள்வியோடு கயிற்றில் ஏறிக்கொண்டு இருந்தான்
கதிரவன்.

கயல்விழியின் ரூம் இருட்டாகவே இருந்தது. தூங்கிவிட்டாளோ என்று கதிரவன் யோசித்தான், பிறகு தன்னை தானே நினைத்து சிரித்து கொண்டான். வாழ்க்கையில் எவளோ முக்கியமான நாள் இப்ப போய் யாராவது தூங்குவாங்களா. விளக்கை போடலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பாத்ரூம் விளக்கு எரிந்து கொண்டு இருந்ததை கவனித்தான். சிறிது நேரம் வெயிட் பண்ணலாம் என்று நினைத்து படுக்கையில் அமர்ந்து நாளை பொழுதை எண்ணி கனவுலகத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.

திடீரென்று விழித்து பார்த்தான் . மணி ரெண்டை தாண்டி இருந்தது. ச்சே.. அசதியில் கண்ணயர்ந்தது புரிந்தது. கயல்விழி இன்னும் பாத்ரூமில் இருந்து வரவில்லை.

எழுந்து சென்று கதவை லேசாக தள்ளினான். அது தடாலென்று திறந்து கொண்டது. ஒரு மிடில் கிளாஸ் பெட்ரூம் அளவுக்கு அந்த பாத்ரூம் இருந்தது.
உள்ளே எட்டி பார்த்தான் யாரும் உள்ளே இருக்கின்ற மாதிரி தெரியவில்லை. வெளியே வந்தான்.. பெட்ரூம் விளக்கை போட்டான். படுக்கை கலைந்து இருந்தது .. பொருட்கள் சிதறி கிடந்தன. ஏதோ யோசித்தவனை காலில் பட்ட ஈரம் அழைத்தது. குனிந்து பார்த்தான். ர..த்..த..ம். . சப்தமில்லாமல் அலறினான் .

மீண்டும் பாத்ரூமில் நுழைந்தான் .

தூரத்தில் இருந்த பாத்டப் அவனை மிரட்டியது.

உள்ளே சென்று பார்த்து மயங்கி விழுந்தான் .

கழுத்து அறுப்பட்டு கயல்விழி பிணமாய் மிதந்து கொண்டிருந்தாள் ..

(தொடரும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)