Wednesday, December 26, 2007

பூவே பூச்சூடவா lyrics

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா.

(பூவே)

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் மெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே)

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பை எரித்தாலும்தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறென் அதில் என் முகம் பார்க்கிறென்
இந்த பொன்மானை பார்த்து கொண்டேசென்று நான் செர வேண்டும்
மீன்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

(பூவே)

Wednesday, February 7, 2007

பட்டினி

குமுதத்தில் படித்தது....




அவரவர் அரிசியில் அவரவர் பெயரை

ஆண்டவன் எழுதியிருப்பான்..

என் அரிசியை மட்டும் ஏனோ

ஒளித்து வைத்துவிட்டான்.




ஏனோ தெரியவில்லை இதை படித்த பின் என் மனம் சற்று கனமானது.


Tuesday, January 2, 2007

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 2

என் உறங்கா இரவுகள் வேகமாய் கழிந்து கொண்டிருக்க ..என்னுள் வச்ந்தம் இதமாய் வீச தொடங்கியது.

அன்று டிசம்பர் 31 ..என் வீட்டிற்கும் என் வீட்டிற்கருகில் இருக்கும் எனது காலேஜ் தோழியின் வீட்டிற்கும் சில காலேஜ் நண்பர்கள் வந்திருந்தார்கள்..சொல்ல மறந்துவிட்டேன் என்னவளின் வீடும் என் வீட்டின் பக்கதில் தான் இருக்கின்றது..அதனால் அவளும் வந்து இருந்தாள்... அன்று அவள் மெருன் நிற சல்வார் அணிந்திருந்தாள்...அன்று மறக்க முடியாத நாள்..

அன்று சாயங்காலம் எல்லரையும் பஸ் ஸ்டாப்பில் டிராப் செய்து விட்டு வரும் வழியில் அவ்ளையும் அவள் வீட்டின் அருகே டிராப் செய்தேன்..அப்போது அவள் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாள்..அந்த நொடி என் உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது..அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்று நொடிப்பொழுதில் நூறு முறை என் மனம் கேள்விகணைகளை தொடுததது.....

இன்று முடிவு தெரிந்து விடும் என்று எதிபார்த்த எனக்கு அன்று குழப்பமே மிஞ்சியது...

"நான் அப்புறமா உன்கிட்ட சொல்றென்" என்று சொன்னாள். என் உள்ள போர்களத்தில் போர்கள் நடப்பதில் அப்படி என்ன அவளுக்கு சந்தோஷம் என்று எனக்கு விளங்கவில்லை..

குழப்பதுடன் நான் நின்று கொண்டிருக்க சற்று தூரம் நடந்து சென்ற பின் அவள் திரும்பி " புத்தாண்டிற்கு எங்காவது வெளியில் செல்கிறாயா" என்று கேட்டாள்..நான் இல்லை என்றென்..."நம்ம இரண்டு பேரும் எங்காவது வெளியில் செல்வோம்" என்றாள்..

குழப்பத்தின் உச்சியில் நான் நின்று கொண்டு ..சரி என்றேன்..அப்பாவியாய். அடுத்த சில நாட்களில் நடக்க போகும் பயஙரங்களை அறியாமல்...


---- நினைவுகள் தொடரும்