Wednesday, December 10, 2008
**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 5
நடந்ததை மனதிற்குள் எத்தனை முறை ஓட்டி பார்த்தாலும் வினாக்கள் மட்டுமெ விடையாய் வெளிப்பட்டன.
சில நாட்களுக்கு பிறகு.
சாட்டில் அவள் வந்தாள். என்ன ஆனாலும் சரி மனதில் உள்ளதை கொட்டி என் நிலையை தெளிவுபடுத்த வேண்டுமென என் மனம் கூறியது.
கொட்டினேன்.
அவள் அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை என எனக்கு விளங்கியது.
அவள்: நான் இன்னொரு பையனை காதலிக்கிறேன்.
(இது என் வீட்டுற்கருகில் இருக்கும் மற்றொரு தோழி மூலம் முன்பே தெரிந்திருந்தாலும் இப்பொழுது ஏன் சொல்கிராள் என புரியவில்லை. ஓன்று மட்டும் நிச்சயம் அவள் என் 'ஈர்ப்பு' கூற்றை நம்பவில்லை.. 'காதல்' என்றே நினைத்து இதை கூறியிருக்கிறாள்.)
நான்: இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல
அவள்: நான் இதை ஏன் உன்கிட்ட சொல்லனும்.
நான்: நாம நண்பர்கள் தான அப்ப இதை சொல்லி இருக்கலாமே.
அவள்: You are just someone I know. That's all.
நான்: சரி.
அவள்: I am leaving. bye.
நான்: ok bye.
நான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை.
பிரிவு சோகமானது என்பதை பொய்யாக்கியது இந்த உரையாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனம் கொஞ்சம் லேசானது. அவளுக்கு புரிந்ததோ இல்லையோ என்னுடைய நியாயத்தை நான் கூறிவிட்டேன். நிரபராதிகளும் சில சமயம் தண்டிக்க படுவார்கள் தானே!!
மறுநாள்..
நானும் என் வீட்டுற்கருகில் இருக்கும் தோழியும் சாட் செய்து கொண்டிருந்தோம். நடந்தவற்றை நான் கூறினேன். அவள் உடனே தான் தான் இந்த விஷயத்தை 'அவளிடம்' கூறியதாக சொன்னாள். ஏற்கனவே முடிந்த விஷயம் என்பதால் நான் அதற்கு மேல் ஏதும் விவாதிக்கவில்லை. ஆனால் இந்த சின்ன விஷயம் எவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணம் ஆகிவிட்டது என்று வருந்தினேன்.
நான் கற்று கொண்ட பாடம்: பெண்களிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். எதை சொல்ல கூடாதோ அதை எக்காரணத்தை கொண்டும் சொல்ல கூடாது.
மற்றவர்களுக்கு: CRUSH என்பதற்கு காதல் என்று அர்த்தம் இல்லை.
பின்குறிப்பு: என் முதல் எழுத்து முயற்சி இது. தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.
(முற்றும்)
Friday, November 7, 2008
**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 4
கல்லூரி விடுமுறை நாட்கள்..
அவ்வப்பொழுது புத்தகத்தை படித்து கொண்டு முழுக்க முழுக்க தொலைக்காட்சியில் புதைந்த காலம்.
வழக்கம் போல் இரவில் கணினியில் அமர்ந்திருந்தேன். அடுத்து நான் செய்தது இன்றும் ஏன் செய்தோம் என்று வருந்தும் காரியம்.
'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது பெண்களின் மனதை புரிந்து கொள்வது' - நானே என்னை சாட்டையால் மனதில் அடித்து கூறிய வாக்கியம்.
என் வீட்டுற்கருகில் இருந்த மற்றொரு கல்லூரி தோழிக்கு சாட் தகவல் அனுப்பினேன். "எனக்கு 'அந்த' பெண்ணின் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது"
ஈர்ப்பு என்பதற்கு காதல் என்றா அர்த்தம்? (இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் ஈர்ப்பு என்ற வார்த்தையை உபயோகித்திருக்கின்றேன் என்று)
பாவம் அவள் அப்படி தான் புரிந்து கொண்டாள். ஆனால் நான் அதை விட பாவம் அவள் அப்படி புரிந்து கொண்டதை நான் புரிந்து கொள்ளவில்லை.
சில வாரங்களுக்கு பிறகு..
கல்லூரி தேர்வுகள் முடிந்து வகுப்புகள் துவங்கி ஒரு வாரம் இருக்கும்.
அன்று ரக்க்ஷா பந்தன்.. பேருந்தை விட்டு நான் இறங்கி நடந்து கொண்டு இருந்தேன். 'அவள்' கையில் ராக்கி.. நில் என்றாள். நின்றேன். கையை நீட்டு என்றாள். நீட்டினேன்.. ராக்கியை கட்டினாள். அந்த நொடியில் என் மனம் தற்கொலை செய்து கொண்டது..
என் 'ஈர்ப்பின்' மேல் உள்ள வெறுப்பால் அல்ல.. அவள் என்னை தவறாக நினைத்து தவிர்க்க முடியாத தருணம் வரக்கூடாதென்று முன்னெச்செரிக்கையாய் இதை செய்கிறாள் என்பதால்..
ஒரு யுத்தம் மனதிற்குள் நடந்து கொண்டிருக்க அமைதியாய் சிரித்து விட்டு நடந்து சென்றேன். இன்று வாழ்க்கையில் மிக சோகமான நாள். என் நேர்மை சோதிக்கப்பட்ட நாள்.
இவள் இப்படி நினைக்க யார் காரணம்?
குழப்பங்கள் மட்டுமே விடையாய் வெளிப்பட உண்மையான விடை தெரியாமல் விடியல் விலகும் நேரத்தில் நடந்து கொண்டிருந்தேன் வீட்டை நோக்கி...
நினைவுகள் தொடரும்... (அடுத்த பகுதியில் முடியும்)
Thursday, July 3, 2008
**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 3
காற்றை கிழித்து கொன்டு கல்லூரி பேருந்து சென்று கொண்டு இருந்தது. நானதில் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன், அன்றென் இருக்கைக்கு அருகில் யாரும் அமரவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை ஏதோ ஈர்த்தது.
அவள்தன் இருக்கையில் இருந்து எழுந்து என்னருகில் வந்தமர்ந்தாள். பேருந்தில் ஒரே இரைச்சல் ஆனால் என்னுள் ஒரு புயலடித்து ஒய்ந்த நிசப்தம். என்ன சொல்ல போகிறாளோ என்று ஒரே குழப்பம்.
அவள்: "நீ ரொம்ப சென்ஸிடிவ்னு எனக்கு தெரியும் ஆனாலும் நான் இதை சொல்லியெ தீரனும்"
நான்: "அப்படில்லாம் ஒண்ணும் இல்லை நீ சொல்லு" - என் எதிர்பார்ப்புகள் இமயமலையை கடந்து சென்று கொண்டிருந்தது.
அவள்: "நீ 'அந்த' பொண்ணு கூட சாட் பண்ணுறியா?"
நான்: "ஆமா எப்பவாச்சும் பண்ணுவேன்" - என் எதிர்பார்ப்புகளுக்குள் டைம் பாம் டிக்க் டிக்க் என சப்தமிட்டு கொண்டு இருந்தது.
அவள்: "'அவ' பாவம் அவளோட காதலனோட பேசுறது அந்த டைம் மட்டும் தான். நீ சாட் பண்ணுறது அவளுக்கு இடையூரா இருக்காம்"
நான்: "நான் சும்மா கேஸுவலா தான் சாட் பண்ணுறேன் வேற எதுவும் இல்லை" ( அவள் இப்படி நினைப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கின்றது ஆனால் அதை அவளுக்கு விளக்கும் நிலையில் நான் இல்லை)
அவள்: "சரி இனிமே சாட் பண்ணாதே. நீ ஒண்ணும் இதுனால அப்ஸெட் ஆகல இல்ல"
நான்: "சே சே" (இதை விட வேற எதுக்கு அப்ஸெட் ஆக முடியும். 3..2..1.. டமால்.. டமால்)
பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நானும் அவளும் நடந்து கொண்டிருந்தொம். அவள் மறுபடியும் "Are you ok" என்றாள். நானும் "I am ok " என்று வீட்டிற்கு சென்றேன்.
மனதிற்குள் எண்ணங்கள் தடைபட்டு கொண்டிருக்க ஏதோ ஒரு மூலையில் மட்டும் phoenix பறவையயைப்போல் அவள் மீது ஒரு ஈர்ப்பு மறுபடியும் துளிர் விட ஆரம்பித்தது
நினைவுகள் தொடரும்...
Tuesday, January 2, 2007
**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 2
அன்று டிசம்பர் 31 ..என் வீட்டிற்கும் என் வீட்டிற்கருகில் இருக்கும் எனது காலேஜ் தோழியின் வீட்டிற்கும் சில காலேஜ் நண்பர்கள் வந்திருந்தார்கள்..சொல்ல மறந்துவிட்டேன் என்னவளின் வீடும் என் வீட்டின் பக்கதில் தான் இருக்கின்றது..அதனால் அவளும் வந்து இருந்தாள்... அன்று அவள் மெருன் நிற சல்வார் அணிந்திருந்தாள்...அன்று மறக்க முடியாத நாள்..
அன்று சாயங்காலம் எல்லரையும் பஸ் ஸ்டாப்பில் டிராப் செய்து விட்டு வரும் வழியில் அவ்ளையும் அவள் வீட்டின் அருகே டிராப் செய்தேன்..அப்போது அவள் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாள்..அந்த நொடி என் உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது..அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்று நொடிப்பொழுதில் நூறு முறை என் மனம் கேள்விகணைகளை தொடுததது.....
இன்று முடிவு தெரிந்து விடும் என்று எதிபார்த்த எனக்கு அன்று குழப்பமே மிஞ்சியது...
"நான் அப்புறமா உன்கிட்ட சொல்றென்" என்று சொன்னாள். என் உள்ள போர்களத்தில் போர்கள் நடப்பதில் அப்படி என்ன அவளுக்கு சந்தோஷம் என்று எனக்கு விளங்கவில்லை..
குழப்பதுடன் நான் நின்று கொண்டிருக்க சற்று தூரம் நடந்து சென்ற பின் அவள் திரும்பி " புத்தாண்டிற்கு எங்காவது வெளியில் செல்கிறாயா" என்று கேட்டாள்..நான் இல்லை என்றென்..."நம்ம இரண்டு பேரும் எங்காவது வெளியில் செல்வோம்" என்றாள்..
குழப்பத்தின் உச்சியில் நான் நின்று கொண்டு ..சரி என்றேன்..அப்பாவியாய். அடுத்த சில நாட்களில் நடக்க போகும் பயஙரங்களை அறியாமல்...
---- நினைவுகள் தொடரும்
Friday, December 8, 2006
**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 1
பின் ஏன் திடீரென்று ஒரு விதமான தடுமாற்றம் என் மனதில்..
அந்த ஒரு மாலை நேரம்..அத்தனை நாள் நண்பியாய் இருந்த நீ அன்று மட்டும் ஏன் எனக்கு தேவதையாய் தோன்றினாய்...
அந்த மஞ்சள் மின் விளக்கிற்கு கீழே நீ நடந்து வந்த போது..என் மனதிற்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது..
அன்று நான் உற்ங்க வெகு நெரம் ஆனது.. அதன் பிறகு என் இரவுகள் உன் நினைவுகளால் வெகு நெரம் விழித்திருக்க தொடங்கியது..
உறங்காமல் விழித்திருப்பதும் சுகம் தான் உன் நினைவுகளில் நீந்திக்கொண்டிருக்கும் வரை...............
---- நினைவுகள் தொடரும்
