Monday, February 23, 2009

எதிர்வீட்டு தேவதை

பார்க்கும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகு என் எதிர்வீட்டு தேவதை. அவளின் அப்பன்காரன் கொஞ்சம் சிடு சிடு எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வருவான். அம்மா கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் எல்லாரிடத்திலும் சகஜமாக பேசமாட்டார். இந்த காரணத்தினாலேயே அவள் என்னை பார்த்து சிரித்தாலும் கிட்ட போய் பேச தயங்கினேன்.

அன்று அவள் வீட்டு மாடியில் நண்பர்களுடன் பேசி சிரித்து கொண்டிருந்தாள். திடீர் என்று ஒரே சத்தம். எதோ சண்டை நடப்பதை போல் இருந்தது. அவளின் அப்பா பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டு கொண்டிருந்தார். அவர் பையன் இனிமே தன் வீட்டுக்கு வர கூடாதென்றும் தன் பெண்ணிடம் இனிமே பேச கூடாதென்றும் கத்தி கொண்டிருந்தார். என்ன நடந்தது என கேட்க ஆர்வம் இருந்தாலும் இந்த வயதில் என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்து அமைதியானேன் .

இந்த சம்பவத்திற்கு பிறகு அவளை அடிக்கடி வெளியில் பார்க்கமுடியவில்லை. அமாவாசை அன்று நிலவினை தேடி ஏங்கும் பிள்ளை போல் என மனம் அவளை நினைத்து ஏங்கி கொண்டிருந்தது.

அன்று அவள் வீட்டில் ஏதோ விசேஷம். வீடே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னி கொண்டிருந்தது, ஜன்னலுக்கு இடையில் என தேவதையும் தெரிந்தாள். வெளிர்நீல உடையில் தேவதைகளுக்கெல்லாம் தேவதையாக ஜொலித்துக்கொண்டிருந்தாள். தயங்கிவாறு முதல் முறையாக அவள் விட்டுக்குள் சென்றேன். சில பரிச்சயமான முகங்களுக்கு இடையில் அவளின் அப்பா ஒரு செயற்கை சிரிப்பை வரவழைக்க முற்பட்டு தோற்றுகொண்டிருந்தார்.

மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் அருகே சென்று நின்றேன். பச்.. பச்.. அவளின் ஆப்பிள் கன்னத்தில் முத்தமிட்டேன். யாரும் எதுவுமே பேசவில்லை. அந்த அமைதி என்னை நெருடியது.

கூட்டதிலிருந்து ஒரு குரல்.
"என்ன பஞ்சாபகேசன் சார் உங்க பொண்ணு குழந்தைய கூட்டிட்டு அமெரிக்கா போனதிலேர்ந்து ரொம்ப அமைதியா ஆயிட்டீங்க. இந்த மாதிரி குழந்தைங்க பர்த்டே பங்சன் மத்த விசேஷங்கள் எல்லாம் கலந்துகிட்டீங்கனா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்குமே "

"ஆமா இனிமே எல்லாத்துலயும் கலந்துக்கிறேன்" பல்செட் தெரிய சிரித்துகொண்டிருந்தேன்.

Friday, February 20, 2009

ஒரு ஆன்மாவின் ஓலம்

இந்த பூமியில் பிறந்து நொடி நான் அழுதேன்

நீ பால் கொடுத்தாய்

பின் நான் அழவும் இல்லை
எழவும் இல்லை

தாய்பால் தானே கேட்டேன்

ஏனம்மா கள்ளி பால் கொடுத்தாய்..

Thursday, February 19, 2009

உனக்காக நான் ....

உன் கடைக்கண் பார்வையில்
நான் காற்றில் பறக்கிறேன்

உன் மூச்சுகாற்றில்
நான் மூர்ச்சையாகிறேன்

உன் பாதச்சுவடில்
என் கால்கள் பதிக்கிறேன்

உன் வியர்வை துளிகளில்
நான் அமிர்தம் காண்கிறேன்

உன் கஞ்ச சிரிப்பினில்
என் உலகை மறக்கிறேன்

உன் உதட்டு சொற்களில்
நான் மொழிகள் கற்கிறேன்

உன் கூந்தல் வாசத்தில்
என் சுவாசம் தொலைக்கிறேன்

உன் கொலுசின் ஓசையில்
நான் இசையை உணர்கிறேன்

உன் கன்னக்குழியில்
நான் விழுந்து எழுகிறேன்

உன் கருவிழிகளில்
என் விடியலை மறக்கிறேன்

உன் மெல்லிடையில்
என் சிந்தனைகளை தொலைக்கிறேன்

உன் பெயரை கொண்டு
நான் கவிதைகள் எழுதுகிறேன்

உன்னை தொடர்ந்து
என் நிழலை அனுப்புகிறேன்

நான் தொடர
உன் காதலை அனுப்பிவை !!

Wednesday, February 18, 2009

மரண வியூகம் - பகுதி 3

"நான் ஸ்பாட்டுக்கு வரேன் குலசேகரன் நீங்க அங்கேயே வெயிட் பண்ணுங்க"

"சரி சார்.. "
.....
"குலசேகரன் நீங்க தான பாடிய முதல பாத்தது"

"ஆமா சார்"

"நீங்க வேற எங்கயும் கை வைக்கலையே.. "

"இல்ல சார்"

"சரி நீங்க கெளம்புங்க குலசேகரன் வேற எதாவது வேணும்னா நான் கால் பண்றேன்"

"சரி சார்"

குலசேகரனின் குரலில் ஒரு செயற்கை பதட்டம் தெரிந்ததை இளமாறன் கவனித்து கொண்டிருந்தார். கதிரவன் கொலை அவரது யூகங்களை நிச்சயமாக்கி கொண்டிருந்தது. கதிரவன் அபபாவி, அவனை இதில் சிக்க வைக்க முயற்சித்து அது தோற்றதால் கொலை செய்திருக்கிறார்கள் என மனதிற்குள் நினைத்தார்.

மறுநாள்.. போலீஸ் ஸ்டேஷன்..

இன்ஸ்பெக்டர் இளமாறன் கைரேகை நிபுணர்களுடன் உரையாடி கொண்டிருந்தார்.

"இன்ஸ்பெக்டர் சார் கயல்விழியோட மர்டர் ஸ்பாட்ல எடுத்த கைரேகை ரிப்போர்ட் புல்லா வந்துடுச்சு"

"எதாவது புதுசா அதுல தகவல் இருக்கா"

"இருக்கு சார்.. நாங்க முன்னாடியே சொன்ன மாதிரி ரெண்டு கைரேகை பதிவாயிருக்கு.. ஒன்னு கதிரவனோடது இன்னொன்னு யாரோடதுன்னு தெரில"

"ம்ம்ம்.."

"நேத்து கதிரவனோட மர்டர் ஸ்பாட்ல எடுத்த கைரேகையும் அதுவும் மேட்ச் ஆகுது சார்"

"வாட்.. "

"ஆமா சார்.. ஆனா அந்த ரேகை நம்ம ரெகார்ட்ல இருக்கிற எந்த கிரிமினல்ஸ்யோடையும் மேட்ச் ஆகல"

இளமாறனுக்கு லேசாக பொறி தட்டியது. குலசேகரன் கொடுத்த விசிடிங் கார்டை டேபிள் மேலிருந்து எடுத்தார்.

"இந்த பிங்கர் ப்ரிண்ட்ஸ் அதோட மேட்ச் ஆகுதானு பாருங்க"

"ஒரு நிமிஷம் சார்"

கைரேகை நிபுணர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பூதக்கண்ணாடி மற்றும் சில பவுடர்களை கொண்டு அந்த கார்டை அலசி கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் லேசாக மலர்ந்ததை கண்டார் இளமாறன்.

"சொல்லுங்க என்ன ஆச்சு"

"சார் இந்த கைரேகையும் அந்த மர்டர் ஸ்பாட்ஸ்ல எடுத்த கைரேகையும் மேட்ச் ஆகுது சார்"

இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆடிப்போனார். இவ்வளவு நாள் குற்றவாளி கூட இருந்தும் அவன் மேல சந்தேகம் வரலையே என்று தன்னை தானே நொந்து கொண்டார். ஜீப்பை எடுத்து கொண்டு குலசேகரன் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

குலசேகரன் வீடு..

"குலசேகரன்.. குலசேகரன்.. நான் இன்ஸ்பெக்டர் இளமாறன் வந்திருக்கேன் கொஞ்சம் கதவ திறங்க"

உள்ளிருந்து பதில் இல்லை. கதவை எட்டி உதைக்க முற்படும் போது தான் கதவின் கீழ்பகுதியில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதை கவனித்தார்.

உள்ளே குலசேகரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான்.

இளமாறனுக்கு வேர்த்து வழிந்து கொண்டிருந்தது. கேஸை முடித்து விட்டோமென்று நினைக்கும் போது இது என்ன புது குழப்பம். அடுத்தடுத்து மூன்று கொலைகள், மோடிவ் என்னவென்ற விளங்காத கொலைகள் இளமாறனுக்கு லேசாக தலைசுற்றியது. கல்லூரியில் விசாரித்த போது கதிரவனும் குலசேகரனும் நெருங்கிய நண்பர்கள் என்றே அனைவரும் சொன்னார்கள் ஆனால் கதிரவன் கயல்விழி காதலை பற்றி யாருக்கும் தெரியவில்லை தனக்குள்ளே நடந்தவற்றை அலசிகொண்டிருந்தார் இளமாறன்.

செல்போன் சிணுங்கியது..

"சார் நான் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன்"

"சொல்லுங்க"

"நீலமேகம் வீட்லேர்ந்து அவரு வேலைக்காரன் போன் பண்ணான் சார்"

"அதான் பாடிய ஹாண்டோவெர் பண்ணியாச்சுல்ல அப்புறம் என்ன வேணுமாம் அவருக்கு"

"நீலமேகம் தூக்கிலே தொங்கி தற்கொலை பண்ணிகிட்டராம் சார்"

"வாட்.. .. நானே உடனே அங்க போறேன்.. " இன்ஸ்பெக்டர் குழப்பத்தின் உச்சியில் இருந்தார்.

நீலமேகத்தின் வீடு. நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் , வேடிக்கை பார்ப்பவர்கள் என வீட்டை மொய்த்து கொண்டு இருந்த கூட்டம் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் வழிவிட்டு ஒதுங்கியது. பயத்தில் யாருமே நீலமேகத்தின் அறைக்கு செல்லவில்லை. பயம் என்பதை விட எங்கே இந்த வில்லங்கத்தில் நாமும் சிக்கி விடுவோமா என்ற எண்ணமே அதற்கு காரணம். இளமாறன் கதவை திறந்து கண்களை விட்டத்துக்கு செலுத்தினார். நாக்கு வெளியில் தொங்கியபடி நீலமேகம் பானில் தொங்கி கொண்டிருந்தார். அறையில் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என நோட்டம் விட்டு கொண்டிருந்த இளமாறனின் கவனத்தை காற்றில் அசைந்தபடி மேஜையின் மேலிருந்த அந்த கடிதம் ஈர்த்தது. அதை எடுத்து படிக்க தொடங்கினார்.



இன்ஸ்பெக்டர் இளமாறனுக்கு,

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்பது போல நான் படிக்க வைத்த என் வீட்டு வேலைக்காரியின் மகன் குலசேகரன் எனக்கே துரோகம் செய்து விட்டான். என் வீட்டு குழந்தைய அவன் சீரழித்து கொலை செய்து விட்டான். என் மகளின் காதலை பற்றி அவன் என்னிடம் சொன்ன போது எனக்கு வேறு வழி தெரியமால் அவனின் சொல்படி கதிரவனை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதை அவனே யார்க்கும் சந்தேகம் வராதபடி செய்வதாக சொன்னபோது அவனை நம்பினேன். ஆனால் இந்த எல்லா திட்டமும் கயல்விழியை அடைய அவன் போட்டது என்று எனக்கு விளங்காமல் போய் விட்டது. நானே வேறு அவனுக்கு கதவை திறந்து அந்த ரூமிற்குள் அனுப்பி இந்த பாவத்துக்கு துணை போய் விட்டேன். நீங்கள் எனக்கு அன்னைக்கு என் பொண்ணோட உடலிலிருந்த ப்ளட் குரூப் கதிரவனோடது இல்லைன்னு சொல்லும்போது இது நிச்சயம் குலசேகரன் தான்னு எனக்கு தெரிஞ்சுது , ஆனா சட்டத்தின் மூலம் அவன தண்டிக்க ரொம்ப நாள் ஆகும்னு நானே அவன தீர்த்து கட்ட முடிவு செஞ்சேன். கொலைவெறி புடிச்ச அவன் நான் அவனை கொலை பண்றதுக்குள்ளே எங்கே கதிரவன் மூலம் தான் மாட்டிகொள்வோமோனு அவனையும் கொலை பண்ணிட்டான். குலசேகரன கொலை பண்ணின போது எனக்கு ஒரு மன நிம்மதி கெடைச்சுது. அந்த நிம்மதியோட என் பொண்ணு கிட்ட சேர முடிவு பண்ணினேன். தயவு செஞ்சு என்னை என் பொண்ணு பக்கத்துல புதைக்க ஏற்பாடு பண்ணுங்க ....ப்ளீஸ் ..


(முற்றும்)

Tuesday, February 17, 2009

மரண வியூகம் - பகுதி 2

இன்ஸ்பெக்டர் இளமாறன் கயல்விழியின் பிணத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

கைரேகை நிபுணர்கள் தங்கள் பணியை செய்து கொண்டிருக்க கதிரவனுக்கு லேசாக நினைவு திரும்பி கொண்டிருந்தது. கைகளில் விலங்குகள் பூட்டபட்டதை உணர்ந்த பின்பு தான நிலைமையின் விபரீதம் அவனுக்கு விளங்க துவங்கியது. "நான் அவளை கொல்லவில்லை நான் அவளை கொல்லவில்லை " என அலறினான், இன்ஸ்பெக்டர் இளமாறன் அவனை காவல்நிலையத்துக்கு கூட்டிசெல்லுமபடி கான்ஸ்டபிள்களை பணித்தார்.

கயல்விழ்யின் தந்தை நீலமேகம் கண்ணீருடன் இன்ஸ்பெக்டரை ஏறிட்டு "என் குழந்தைய இந்த நிலைமைக்கு ஆளாக்கின அவனுக்கு எப்படியாவது தூக்கு தண்டனை வாங்கித்தரனும்" என்றார். "சட்டம் தன் கடமையை செய்யும் நீலமேகம் நீங்க கொஞ்சம் தைரியமா இருங்க" சாந்தப்படுத்த முயன்று தோற்றார் இளமாறன்.


போலீஸ் ஸ்டேஷன்...


"ஏன் கதிரவன் இந்த கொலையை செஞ்சீங்க"

"சார் சத்தியமா நான் இந்த கொலைய பண்ணல சார்"

"பின்ன அந்த நேரத்துல கயல்விழியோட ரூம்ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க"

"நானும் அவளும் லவ் பண்ணோம் சர்.. நேத்து நைட் ஓடி போலாம்னு பிளான்.. அவ வெளில வராததுனால என்ன ஆச்சுன்னு பாக்க உள்ளே போனேன்.. அங்க என்னோட கயலோட பொணத்த பார்த்து மயங்கிட்டேன்"

"இன்னும் கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லிருக்கலாம் கதிரவன்"

"சார் நான் சொன்னது அத்தனையும் உண்மை"

"அங்க இருந்த எடுக்கப்பட்ட தடயங்கள் உங்களுக்கு சாதகமா இல்லையே கதிரவன்"

"தடயங்களா.."

"அந்த ரூம்ல நீங்க ரொம்ப நேரம் இருந்ததுக்கு அடையாளமா பெட்ல உங்க தலைமுடி பெட்ரூம் முழுதும் உங்க சேறு பதிந்த ஷூ தடங்கள் பல இடங்களில் உங்க கைரேகைகள் ..."

"சார் அது வந்து.. அவ பாத்ரூம்ல இருக்கானு நெனைச்சு வெயிட் பண்ணேன் அப்ப என்னோட முடி கால்த்தடம் எல்லாம் பதிஞ்சிருக்கும் "

"பொய் மேல பொய் சொல்லாதீங்க கதிரவன்.. அந்த பாத்ரூம்ல சேரோட இருக்கிற உங்கள் ஷூ தடமும் ரத்தத்தோட இருக்கிற தடமும் இருக்கு.. நீங்க இதிலேர்ந்து தப்பிக்க வழி இல்லை.. மேற்கொண்டு நீங்க எதாவது பண்ணனும்னு நினைச்சிங்கனா உங்க வக்கீல் மூலமா பண்ணுங்க"

கயல்விழியின் வீடு...

"இன்ஸ்பெக்டர் சார், என் பொண்ணோட பாடி எப்ப தான் கிடைக்கும்" நடுக்கத்துடன் கேட்டார் நீலமேகம்.


"போஸ்ட் மார்டம் முடிஞ்சு எப்படியும் ரெண்டு நாள்ல கிடைக்கும் சார்"

"ம்ம்"

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா நீலமேகம்"

"இல்ல சார்.. ரொம்ப அமைதியான பொண்ணு சார் .. இப்படி பண்ணிட்டானே சார்"

"உங்களுக்கு கதிரவன முன்னாடியே தெரியுமா"

"இல்ல சார்.. நான் அவன பாத்ததே இல்ல"

"உங்க ஒத்துழைப்புக்கு நன்றி.. வேற எதாவது வேணும்னா நான் உங்கள
காண்டாக்ட் பண்றேன்"

மறுநாள்..

"இன்ஸ்பெக்டர் சார் .. என் பேர் குலசேகரன் .. இவரு எங்க லாயெர்.. கதிரவன பெயில்ல எடுக்க வந்திருக்கோம்"

"நான் உங்ககிட்ட சொல்ல வேண்டியதில்லை இருந்தாலும் சொல்றேன் .. தினமும் காலைல பத்து மணிக்கு இங்க வந்து கையெழுத்து போடணும்"

"கண்டிப்பா சார்.. மிக்க நன்றி"

"குலசேகரன் நீங்க கதிரவனோட நெருங்கிய நண்பரா"

"ஆமா சார்"

"உங்க மொபைல் நம்பர் குடுத்திட்டு போங்க.. விசாரணை பண்ண வேண்டி இருந்த நான் கால் பண்றேன்"

"இந்தாங்க சார்.. என்னோட ஒத்தழைப்பு உங்களுக்கு கண்டிப்பா உண்டு "

"நன்றி"

புழுதியை கிளப்பி கொண்டு கார் கிளம்பியது. வழிநெடுக கதிரவன் நடந்த சம்பவங்களை நினைத்து அழுது கொண்டே இருந்தான். குலசேகரனுக்கு அது நெருடலாக இருந்தாலும் இப்போது பேசுவது உசிதமல்ல என அமைதியாக இருந்தான். கார் கதிரவனின் வீட்டில் நின்றது, இருவரும் வக்கீலிடம் விடைபெற்று கொண்டனர்.

"கதிரவா இப்படி அழுதுகிட்டே இருந்தா ஒண்ணும் நடக்க போறதில்ல. நடந்தது நடந்து போச்சு இனிமே என்ன பண்ணனும்னு பாருடா"

"இந்த கேஸ்ல இருந்த நான் தப்பிக்க வழியே இல்லடா.. கயலே இல்லாத போது நான் மட்டும் ஏன் வாழணும் பேசாம தற்கொலை பண்ணிகலாமானு கூட தோணுது"


"பைத்தியகாரத்தனமா
பேசாத டா.."

"இன்ஸ்பெக்டர் நடந்தத சொன்னா கூட நம்ப மாட்டேன் என்கிறார். எங்களோட லவ் எங்க ரெண்டு பேர தவிர உனக்கு மட்டும் தான் தெரியும்"

"கரெக்ட் .. அப்ப என்னோட சாட்சி எடுபடும் . நாம நாளைக்கே இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுவோம்"

கதிரவனின் முகத்தில் லேசான ஒரு நம்பிக்கை பிறந்தது.

"சரி நீ ரெஸ்ட் எடு நான் கெளம்பறேன்.. நாளைக்கு சைன் பண்ண போகும்போது இன்ஸ்பெக்டர் கிட்ட இத பத்தி பேசுவோம்"

"சரி .. குட் நைட் "

மறுநாள்..

செல்போன் சினுங்கியது..

"நீலமேகம் நான் இன்ஸ்பெக்டர் இளமாறன பேசுறேன்..உங்க பொண்ணோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்துடுச்சு"

"..."

"மனச திடபடுத்திகோங்க சார். உங்க பொண்ணு கற்பழிக்கப்பட்டு கொலை செய்ய பட்டிருக்கா"

"எ..ன்..ன...து" நீலமேகத்தின் குரல் தழுதழுக்க தொடங்கியது

"சாரி சார். இன்னொரு விஷயம் உங்க பொண்ணு ஒடம்பில இருந்த நகக்கீறல்கள் ... அதிலிருந்த ரத்தம்.. கதிரவனோடது இல்ல"

"...."

"விசாரணைக்கு அப்புறம் நானே கால் பண்றேன் சார்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீலமேகம் லேசாக வியர்த்திருந்தார்.


செல்போன் சினுங்கியது..

"குலசேகரன் நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன் "

"சொல்லுங்க சார்"

"கதிரவன் மொபைல் எடுக்க மாட்டேங்குறார் .. நான் அவர்கிட்ட பேசணும் நீங்க கொஞ்சம் அவர கால் பண்ண சொல்ல முடியுமா"

"யு ஆர் லக்கி சார்.. இப்ப நான் அவன் வீட்டுக்கு வெளில தான இருக்கேன்..
கையெழுத்து போட கூட்டிட்டு போகணுமே அதான்"

"ஒ வெரி குட்.. சரி நான் லைன்லேயே இருக்கேன்.. கொஞ்சம் அவர பேச சொல்லுங்க.. கேஸ்ல ஒரு சின்ன ட்விஸ்ட்.. அவருக்கு சாதகமானது தான்"

"அப்படியா .. சரி ஒரு நிமிஷம் இருங்க"

குலசேகரன் கதவை திறந்து அலறினான்.

"குலசேகரன் என்னாச்சு என்னாச்சு"

"சார்.. கதிரவன யாரோ கொலை பண்ணிட்டாங்க "

(தொடரும்)

Monday, February 16, 2009

மரண வியூகம் - பகுதி 1

அந்த நிசப்தமான இரவில் காற்றில் இலைகள் ஆடும் சத்தம் கதிரவனின் மனதில் ஒரு கிலியை உண்டு பண்ணி கொண்டிருந்தது. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த பங்களாவின் பின்பக்க மதில் சுவர் ஏறினான்.

வீட்டின் முன்பக்கமாக கட்டப்பட்டிருந்த நாய்கள் நாக்கில் எச்சில் தெறிக்க குரைத்து கொண்டிருந்தன. தன் நண்பன் குலசேகரனை கொண்டு அவற்றை திசைதிருப்பிய பெருமிதம் கதிரவனின் முகத்தில் தெரிந்தது.
இது வரை எல்லாம் திட்டம் போட்டபடி நடக்கின்றது, அடுத்து மாடி அறைக்குள் நுழைய வேண்டும் கதிரவன் மனதிற்குள் நினைத்து கொண்டான். திட்டமிட்டபடி கயல்விழி மாடி அறையிலிருந்து கயிற்றை தொங்க விட்டிருந்தாள். மெதுவாக கயிற்றை பிடித்து மேலே ஏற துவங்கினான் கதிரவன்.

நேற்று நடந்தது.....

"கதிரவன் நம்ம காதல் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுடுச்சு"

"என்னைகிருந்தாலும் தெரிய வேண்டியது தான"

"நீங்க நெனைக்கிற மாதிரி அது அவளோ ஈசியான விஷயம் இல்ல.. எங்க அப்பா ரொம்ப மோசமானவரு"

"சரி இப்ப என்ன பண்ணலாம்"

"நாம ஊர விட்டு ஓடி கல்யாணம் பண்ணிக்கறத தவற வேற வழி இல்ல"

"எனக்கு ஒரு நாள் டைம் கொடு.. நான் பணத்த கொஞ்சம் ரெடி பண்ணிக்கிறேன்.. நாளைக்கு நைட் நாம ஓடி போலாம்"

"சரி.. நான் பின்பக்க சுவர் வழியா வெளிய வந்து வெயிட் பண்றேன்"

"சரி.. சரியா பன்னெண்டு மணிக்கு அங்க வந்துடனும் .. நான் குலசேகரனோட அங்க வரேன்.. அவன் நம்மள கார்ல பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணிடுவான்"

"சரி"

நிகழ்காலம்...

வெளியே வந்து வெயிட் பண்றேன் என்று சொன்ன கயல்விழி ஏன் வரவில்லை என்ற கேள்வியோடு கயிற்றில் ஏறிக்கொண்டு இருந்தான்
கதிரவன்.

கயல்விழியின் ரூம் இருட்டாகவே இருந்தது. தூங்கிவிட்டாளோ என்று கதிரவன் யோசித்தான், பிறகு தன்னை தானே நினைத்து சிரித்து கொண்டான். வாழ்க்கையில் எவளோ முக்கியமான நாள் இப்ப போய் யாராவது தூங்குவாங்களா. விளக்கை போடலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பாத்ரூம் விளக்கு எரிந்து கொண்டு இருந்ததை கவனித்தான். சிறிது நேரம் வெயிட் பண்ணலாம் என்று நினைத்து படுக்கையில் அமர்ந்து நாளை பொழுதை எண்ணி கனவுலகத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.

திடீரென்று விழித்து பார்த்தான் . மணி ரெண்டை தாண்டி இருந்தது. ச்சே.. அசதியில் கண்ணயர்ந்தது புரிந்தது. கயல்விழி இன்னும் பாத்ரூமில் இருந்து வரவில்லை.

எழுந்து சென்று கதவை லேசாக தள்ளினான். அது தடாலென்று திறந்து கொண்டது. ஒரு மிடில் கிளாஸ் பெட்ரூம் அளவுக்கு அந்த பாத்ரூம் இருந்தது.
உள்ளே எட்டி பார்த்தான் யாரும் உள்ளே இருக்கின்ற மாதிரி தெரியவில்லை. வெளியே வந்தான்.. பெட்ரூம் விளக்கை போட்டான். படுக்கை கலைந்து இருந்தது .. பொருட்கள் சிதறி கிடந்தன. ஏதோ யோசித்தவனை காலில் பட்ட ஈரம் அழைத்தது. குனிந்து பார்த்தான். ர..த்..த..ம். . சப்தமில்லாமல் அலறினான் .

மீண்டும் பாத்ரூமில் நுழைந்தான் .

தூரத்தில் இருந்த பாத்டப் அவனை மிரட்டியது.

உள்ளே சென்று பார்த்து மயங்கி விழுந்தான் .

கழுத்து அறுப்பட்டு கயல்விழி பிணமாய் மிதந்து கொண்டிருந்தாள் ..

(தொடரும்)

சட்டேன்று ஒரு காதல் - பகுதி 3

"ஆமாடா இளமாறா .. கல்யாணத்த இன்னும் ரெண்டு மாசத்துல வைக்கணும்னு அவுங்க அப்பா சொல்லிட்டாரு..அதுக்கு எங்க அப்பாவும் ஒத்துகிட்டாரு"

"டேய்..நீ உண்மையிலே அந்த பொண்ண லவ் பண்றியா"

"அது வந்து.."

"ஒரு வெங்காயமும் வேணாம்.. கல்யாணத்த நீ தள்ளி போட முடியாது.. .. நீங்க வெறும் செஸ் காய்கள் தான் இனிமே"

"இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றே"

"பேசாம கல்யாணத்த பண்ணிக்கோ.. வேற சாய்ஸ் எதுவும் இல்ல"

"சரி.. நடக்கிறது நடக்கட்டும்"

செல்போன் சிணுங்கியது ...

"சுரேஷ் நம்ம கல்யாண டேட் பிக்ஸ் பண்ணிட்டாரு அப்பா"

"என்னைக்கு "

"அடுத்த மாசம் ஆறு "

"அவளவு சீக்கிரமாவா"

"ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு.. சந்தோஷத்தையே காணுமே"

"இல்ல இல்ல லேசா தலைவலி அவளோ தான"

"சரி நான் நாளைக்கு கால் பண்றேன்"

..
"இளமாறா சுரேஷ் பேசுறேன்"

"சொல்லு"

"டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்கடா"

"என்னைக்கு"

"அடுத்த மாசம் ஆறு"

"அவளோ சீக்ரமா.. சரி என்ஜாய் பண்ணு.."

"ம்ம்ம்.. உன்கிட்ட சொல்லனும்னு தோணிச்சு.. இன்விடசன் ரெடி ஆனா ஒடனே சொல்றேன் டா "

"சரி சரி"

இரு வாரங்களுக்கு பிறகு..

"இந்தாடா இன்விடசன் கண்டிப்பா வந்துடனும்"

"வராம இருப்பேனா"

"எல்லாருக்கும் கொடுத்துட்டேல"

"இனிமே தான கொடுக்கணும்"

"சரி நீ கெளம்பு.. கல்யாணத்துல மீட் பண்ணுவோம்"

பிப்ரவரி ஆறு ...

"கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"டேய் டேய்.. அடங்குடா.. ரொம்ப பெரியவன் மாதிரி பேசாத .. ஓவரா பேசுன .. பால்ய விவாகம்னு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்"

" ஹா ஹா ஹா"

"தொடர்கதையா பல காதல்கள் இழுத்துகிட்டு இருக்கும் போது சிறுகதை மாதிரி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டீங்க .. வாழ்த்துக்கள் சுரேஷ்.. வாழ்த்துக்கள் காஞ்சனா"

"நன்றி இளமாறா "

(சுபம்)

Friday, February 13, 2009

சட்டென்று ஒரு காதல் - பகுதி 2

"ஆமா காஞ்சனா தான் பேசுறேன்.. ப்ரீயா இருக்கியா"

"ப்ரீயா தான் இருக்கிறேன் .. என்ன விஷயம் "

"ஏன் ஏதாவது விஷயம் இருந்தா தான போன் பண்ணனுமா"

"அதுக்கில்லே.. என்ன திடீர்னு"

"சும்மா பேசலாம்னு தானா கூப்டேன்.. தப்பா"

"இல்ல இல்ல.. பேசு பேசு"

"காலைல மீட் பண்ணத பத்தி என்ன நெனைக்கிற.. ஏதாவது யோசிச்சியா"

"ஒண்ணும் பெரிசா யோசிக்கில.. நீ எதாவது சொல்லனும்னு நெனைக்கிறியா"

"சரி நான் சுத்தி வளைச்சு பேசல.. எனக்கு உன்ன புடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கா"

"பி..டி..ச்..சி..ரு..க்..கு... ஆனா "

"என்ன ஆனா"

"இந்த போன் கால்ல இந்த கேள்விய நான் எதிபார்க்கல"

"அப்ப என்ன நான்அவசரபடரேணு சொல்றியா"

"நாம அவசரபடுரோமோணு தோணுது"

"சரி நாம சும்மா பேசுவோம் பிடிச்ச கண்டினியு பண்ணுவோம்"

"சரி"

"உங்க வீட்ல எத்தனை பேரு..."

"நான் எங்க அம்மா அப்பா தங்கச்சி"
..........
............

...............


"நாம பேச ஆரம்பிச்சி மூணு மணி நேரம் ஆச்சு சுரேஷ்.. டைம் போனதே தெரில"

"ஆமா கரெக்ட் தான்.. "

"நாளைக்கு மீட் பண்ணுவோமா"

"சரி நான் காலைல போன் பண்றேன்"

இரண்டு வாரங்களுக்கு பிறகு ........

"நாம லவ் பண்ண ஆரம்பிச்சி இதோட ரெண்டு வாரம் ஆச்சு காஞ்சனா "

"ஆமா சுரேஷ் .. எங்க வீட்ல கல்யாணத்த பத்தி லேசா பேச்சு எடுக்க ஆரம்பிச்சிடாங்க"

"நாம ஏன் நம்ம வீட்ல இத பத்தி பேச கூடாது"

"ஒத்துபாங்களா?"

"ஒத்துபாங்கனு தான் நெனைக்கிறேன்.. நாம ரெண்டு பேருமே ஒரே காஸ்ட் வேற சோ பிரச்சனை ஒன்னும் இருக்காது"

"சரி நாளைக்கு பேசி பாப்போம்"

மறுநாள்..

"சுரேஷ் நான் வீட்ல சொன்னேன் ..ஒரே காஸ்ட்ணு சொன்னதால பெருசா
பிரச்சினை வரல.. உன்ன பத்தி டீடைல்ஸ் கேட்டாங்க"

"எங்க வீட்லயும் அதே தான் காஞ்சனா.. "

"இரு கேளு.. நான் டீடைல்ஸ் சொன்ன அப்புறம்.. உங்க அப்பா அம்மா கிட்ட பேசனும்ணு சொன்னாங்க"

"ஏய் இரு இரு.. அவசரப்பட வேண்டாம்.. கல்யாணம் எல்லாம் ஒரு வருசத்துக்கு அப்புறமா வச்சுக்கலாம்"

"என்னக்கும் அப்படி தான் தோனுது.. அவுங்க பேசினா கொஞ்சம் ஸாடிஸ்பைட்டா இருக்கும்னு நினைக்கிறாங்க போல"

"சரி எங்க அப்பா போன் நம்பர் மெசேஜ் பண்றேன் உங்க அப்பா கிட்ட குடு"

"சரி.."

"அது சரி இந்த சந்தோஷத்த எப்படி செலேபிரெட் பண்றது"

"புதுசா என்ன பண்ண போறோம்.. அதே காபி டே அப்புறம் படம் தான் "

செல்போன் சிணுங்கியது..

"இளமாறா ஒரு விஷயம் டா"

"டேய் கிறுக்கா.. மறுபடியும் ஏதாவது பொண்ணு விஷயமா"

"பொண்ணு விஷயம் தான் ஆனா வேற பொண்ணு இல்ல அதே பொண்ணு"

"என்னது...."

"ஆமா நாங்க லவ் பண்றோம்"

அடங்கொய்யால.. ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்ல வேண்டியது தான"

"கோவப்படாத டா .இப்ப அதுல ஒரு சிக்கல்"

"என்னது டா"

"அந்த பொண்ணோட அப்பா எங்க அப்பா கிட்ட பேசனும்னு நம்பர் வாங்கினாரு.. "

"சரி"

"நேத்து போன் பண்ணி பேசிருக்காரு. நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு
விஷயம் நடந்திருச்சுடா.. அவரு எங்க அப்பா கிட்ட.............. "

"எ..ன்..ன..டா... சொ..ல்..ர.. .. என்னால நம்பவே முடியல டா"


(தொடரும்)

Thursday, February 12, 2009

சட்டென்று ஒரு காதல் - பகுதி 1

"என்னடா சுரேஷ் இன்னைக்கு நேரமே ஆபிசுக்கு வந்துட்ட"


"சும்மா தான் இளமாறா"


"நேத்திக்கு நம்ம அவுட்டிங்ல எடுத்த போட்டோஸ் எல்லாம் நல்ல வந்துருக்குடா"

"அப்படியா எங்க காமி, நான் ஆர்குட்ல போடணும் டா"


தாமரை : "எங்க நானும் பாக்குறேன் "


சில நாட்களுக்கு பிறகு


"டேய் இளமாறா உன் லாஸ்ட் டே இது ட்ரீட் இல்லையா"


"இன்னைக்கு ஈவ்னிங் ஆபீஸ்ல இருந்து ஆர்டர் பண்ணி சாப்டுவோம் டா , சரியா"


"சரி , நான் எல்லாருக்கும் சொல்லிடறேன்"




ஒரு மாதத்திற்கு பிறகு..


செல்போன் சிணுங்கியது...


"சொல்டா சுரேஷ் என்ன விஷயம்"


"அன்னைக்கு தாமரை கிட்ட நாம போட்டோ கொடுத்தோம்ல"


"என்னது நாமலா.. டேய் நீ குடுத்தேன்னு சொல்லு"

"சரி, நான் குடுத்தேன்ல .. அத அவ ரூம் மேட்ஸ் கிட்ட காமிச்சாளாம்"


"ரூட் மாறுதே.. ரொம்ப பீடிகை போடாம விஷயத்த சொல்லு"


"அந்த ரூம் மேட்ஸ்ல ஒருத்தி என்ன நாளைக்கு மீட் பண்ணனும்னு சொல்ராளாம். தாமரையும் கூட வருவாளாம்.. என்ன பண்றதுண்ணே தெரில.. எதாவது ஐடியா கொடுரா இளமாறா"


"ம்ம்... தைரியமா மீட் பண்ணுடா. இதுல என்ன இருக்கு. ஜஸ்ட் மீட்டிங் தான.. என்ன ப்ரோபோசா பண்ண போறே"

"இல்ல எதுக்கு இந்த திடீர் மீடிங்க்ணு புரியல, ஒரே குழப்பமா இருக்கு"

"ஒரு குழப்பமும் இல்ல.. தைரியமா போய் மீட் பண்ணு. அதுகப்புறம் எனக்கு போன் பண்ணு"

மறுநாள்..

"என்னடா சுரேஷ் மீட் பண்ணியா"

"பண்ணேன்.. அவ பேரு காஞ்சனாவாம் .. சும்மா வொர்க் பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்"

"அப்புறம்..."

"அப்புறம்.. அவளோ தான்"

"கெட்ட வார்த்தைல வஞ்சுருவேன்.. ஒரு பொண்ண மீட் பண்ணி வொர்க்க பத்தி பேசிட்டு வந்துருக்கியேடா.. ச்சே"

"எனக்கு வேற என்னே பண்றதுன்னு தெரில"

"சரி பொண்ணு எப்படி இருந்தா.. உனக்கு புடிச்சு இருந்துதா"

"நல்ல தான் இருந்தா ..ஆனா"


"புடிச்சுதா இல்லயா? "

"புடிச்சுது"

"சரி அப்ப அவ கிட்ட நேர பேசி நெக்ஸ்ட் டைம் தனியா மீட் பண்ணு"

"நம்பர் இல்லையே.."

"என்னது நம்பர் இல்லையா.. நீ சுத்த வேஸ்ட் டா .. சரி நீ போஃன வச்சிட்டு வேற வேலைய பாரு.."

செல்போன் சிணுங்கியது..

"ஹலோ இது சுரேஷ் தான"

"ஆமா"

"நான் காஞ்சனா பேசுறேன்"

"யாரு ..... கா..ஞ்....ச...னா..வா... "
(தொடரும்)

Tuesday, February 10, 2009

என்னில் நீ..

என் வானில் நீ மழை

என் கவிதையில் நீ பிழை

என் தூக்கதில் நீ கனவு

என் ஏக்கத்தில் நீ நிலவு

என் காலையில் நீ சூரியன்

என் மாலையில் நீ சந்திரன்

என் துக்கத்தில் நீ கண்ணீர்

என் தாகத்தில் நீ தண்ணீர்

என் காதலில் நீ காதலி

என் சோகத்தில் நீ உயிர்வலி

என் வெற்றியில் நீ சிரிப்பு

என் தோல்வியில் நீ வெறுப்பு

என் குளிரில் நீ போர்வை

என் வெயிலில் நீ வியர்வை

என் யாசகத்தில் நீ சில்லரை

என் மரணத்தில் நீ கல்லறை

Monday, February 9, 2009

என்ன பயன்..?

அழகான உன்னை காணாவிடில்
என் கண்களால் என்ன பயன்

உன் சுவாசம் நுகர முடியாவிடில்
என் மூக்கால் என்ன பயன்

உன் பெயரை உசசரிக்க முடியாவிடில்
என் உதடுகளால் என்ன பயன்

நீ நடந்த பாதையில் நடக்காகவிடில்
என் கால்களால் என்ன பயன்

கனவில் உன்னை காணாவிடில்
என் இரவால் என்ன பயன்

உன் இதயம் சுமக்க முடியாவிடில்
என் உயிரால் என்ன பயன்

உன்னை காதலிக்க முடியாவிடில்
என் பிறவியால் என்ன பயன்

உன்னை அடைய முடியாவிடில்
என் ஆண்மையால் என்ன பயன்

மலரும் காதலை மனதிர்குள்ளே மூடிவிட்டால்
என் காதலால் என்ன பயன்

சொல்கின்ற காதல் மறுக்கப்பட்டால்
என் கவிதையாவது எனக்கு பயன்

ஆராதிக்கப்படாத உன் அழகால் என்ன பயன்...?

ஆழியிலே முக்குளிக்கும் அழகே..

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் கற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற கன்னத்தில்
விம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா

உன் உம் என்ற சொல்லுக்கும்
இம் என்ற சொல்லுக்கும்
இப்பொதே தடை வைக்கவா
மௌனத்தை குடி வைக்கவா

அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி
மறித்தாலும் மறக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனை போல இருக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனை போல இருக்காது அழகே


ஆழகே அழகே வியக்கும் அழகே
ஆழகே அழகே வியக்கும் அழகே