Thursday, July 3, 2008

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 3

சில நாட்களுக்கு பிறகு..

காற்றை கிழித்து கொன்டு கல்லூரி பேருந்து சென்று கொண்டு இருந்தது. நானதில் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன், அன்றென் இருக்கைக்கு அருகில் யாரும் அமரவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை ஏதோ ஈர்த்தது.

அவள்தன் இருக்கையில் இருந்து எழுந்து என்னருகில் வந்தமர்ந்தாள். பேருந்தில் ஒரே இரைச்சல் ஆனால் என்னுள் ஒரு புயலடித்து ஒய்ந்த நிசப்தம். என்ன சொல்ல போகிறாளோ என்று ஒரே குழப்பம்.

அவள்: "நீ ரொம்ப சென்ஸிடிவ்னு எனக்கு தெரியும் ஆனாலும் நான் இதை சொல்லியெ தீரனும்"
நான்: "அப்படில்லாம் ஒண்ணும் இல்லை நீ சொல்லு" - என் எதிர்பார்ப்புகள் இமயமலையை கடந்து சென்று கொண்டிருந்தது.

அவள்: "நீ 'அந்த' பொண்ணு கூட சாட் பண்ணுறியா?"
நான்: "ஆமா எப்பவாச்சும் பண்ணுவேன்" - என் எதிர்பார்ப்புகளுக்குள் டைம் பாம் டிக்க் டிக்க் என சப்தமிட்டு கொண்டு இருந்தது.

அவள்: "'அவ' பாவம் அவளோட காதலனோட பேசுறது அந்த டைம் மட்டும் தான். நீ சாட் பண்ணுறது அவளுக்கு இடையூரா இருக்காம்"
நான்: "நான் சும்மா கேஸுவலா தான் சாட் பண்ணுறேன் வேற எதுவும் இல்லை" ( அவள் இப்படி நினைப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கின்றது ஆனால் அதை அவளுக்கு விளக்கும் நிலையில் நான் இல்லை)

அவள்: "சரி இனிமே சாட் பண்ணாதே. நீ ஒண்ணும் இதுனால அப்ஸெட் ஆகல இல்ல"
நான்: "சே சே" (இதை விட வேற எதுக்கு அப்ஸெட் ஆக முடியும். 3..2..1.. டமால்.. டமால்)

பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நானும் அவளும் நடந்து கொண்டிருந்தொம். அவள் மறுபடியும் "Are you ok" என்றாள். நானும் "I am ok " என்று வீட்டிற்கு சென்றேன்.
மனதிற்குள் எண்ணங்கள் தடைபட்டு கொண்டிருக்க ஏதோ ஒரு மூலையில் மட்டும் phoenix பறவையயைப்போல் அவள் மீது ஒரு ஈர்ப்பு மறுபடியும் துளிர் விட ஆரம்பித்தது

நினைவுகள் தொடரும்...