Friday, November 7, 2008

**தடுமாறும் நினைவுகள்** - பகுதி 4

கல்லூரி விடுமுறை நாட்கள்..


அவ்வப்பொழுது புத்தகத்தை படித்து கொண்டு முழுக்க முழுக்க தொலைக்காட்சியில் புதைந்த காலம்.


வழக்கம் போல் இரவில் கணினியில் அமர்ந்திருந்தேன். அடுத்து நான் செய்தது இன்றும் ஏன் செய்தோம் என்று வருந்தும் காரியம்.

'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது பெண்களின் மனதை புரிந்து கொள்வது' - நானே என்னை சாட்டையால் மனதில் அடித்து கூறிய வாக்கியம்.


என் வீட்டுற்கருகில் இருந்த மற்றொரு கல்லூரி தோழிக்கு சாட் தகவல் அனுப்பினேன். "எனக்கு 'அந்த' பெண்ணின் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது"


ஈர்ப்பு என்பதற்கு காதல் என்றா அர்த்தம்? (இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் ஈர்ப்பு என்ற வார்த்தையை உபயோகித்திருக்கின்றேன் என்று)
பாவம் அவள் அப்படி தான் புரிந்து கொண்டாள். ஆனால் நான் அதை விட பாவம் அவள் அப்படி புரிந்து கொண்டதை நான் புரிந்து கொள்ளவில்லை.


சில வாரங்களுக்கு பிறகு..


கல்லூரி தேர்வுகள் முடிந்து வகுப்புகள் துவங்கி ஒரு வாரம் இருக்கும்.
அன்று ரக்க்ஷா பந்தன்.. பேருந்தை விட்டு நான் இறங்கி நடந்து கொண்டு இருந்தேன். 'அவள்' கையில் ராக்கி.. நில் என்றாள். நின்றேன். கையை நீட்டு என்றாள். நீட்டினேன்.. ராக்கியை கட்டினாள். அந்த நொடியில் என் மனம் தற்கொலை செய்து கொண்டது..

என் 'ஈர்ப்பின்' மேல் உள்ள வெறுப்பால் அல்ல.. அவள் என்னை தவறாக நினைத்து தவிர்க்க முடியாத தருணம் வரக்கூடாதென்று முன்னெச்செரிக்கையாய் இதை செய்கிறாள் என்பதால்..
ஒரு யுத்தம் மனதிற்குள் நடந்து கொண்டிருக்க அமைதியாய் சிரித்து விட்டு நடந்து சென்றேன். இன்று வாழ்க்கையில் மிக சோகமான நாள். என் நேர்மை சோதிக்கப்பட்ட நாள்.


இவள் இப்படி நினைக்க யார் காரணம்?

குழப்பங்கள் மட்டுமே விடையாய் வெளிப்பட உண்மையான விடை தெரியாமல் விடியல் விலகும்  நேரத்தில் நடந்து கொண்டிருந்தேன் வீட்டை நோக்கி...


நினைவுகள் தொடரும்... (அடுத்த பகுதியில் முடியும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)