Thursday, October 1, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 5

வடக்கே சூரியன்
உதித்த நாளில்
பூமி பிளந்து
விண்ணை நோக்கி
மழை பெய்த வேளை
நட்சத்திரங்கள்
வாசலில் திரண்ட நேரம்
கிணற்று நிலா பிம்பம்
வானில் ஒளிர்ந்த தருணம்
நான் உறங்கி கொண்டிருந்தேன்
கல்லறையில் உன் கண்ணீர் துளி
-------------------------------------------------------------

கண்களை தவிர்த்து
மறுபக்கம் திரும்பி
விலகி போக எத்தனித்து
வழியின்றி நெருங்கி
மனமெங்கும் கிலியோடு
கடக்கும் முன் மட்டும்
தவிர்த்தாலும் தவறாமல்
கண் பார்க்கும்
வேகம் கூடும்
ஒரு நாள் பார்க்காவிடினும்
கண்கள் தேடும்
பெருமூச்சு தொடரும்
மறுநாள் மறக்காமல்
தரிசனம் தரும்
மாதங்கள் ஆனாலும்
விட்டெறிந்த கல்லுக்கு
பழிவாங்க காத்திருக்கும்
பக்கத்து வீட்டு நாய்

-------------------------------------------------------------

எதிர்பாராத நிமிடத்தில்
எதேச்சையாய் எதிர்ப்பட்டு
மீளும் முன் மீட்டுவிட்டாள்
தவறினாலும் தவறில்லை
தொலைந்தாலும் பிழையில்லை
மண்ணிடம் விண்ணிடம் சாட்சியில்லை
இவ்விடம் அவ்விடம் பிரிவில்லை
எவ்விடம் உறைவிடம் புரியவில்லை
காதலிடம் காதலியிடம் விடையில்லை
இல்லைகள் தொல்லையில்லை
தொல்லைகள் வலிக்கவில்லை
இல்லைகள் தொலைந்தநேரம்
காதலி இல்லவேயில்லை

5 comments:

நிலாமதி said...

காத்திருப்பது தான் காதல் ..........நல்ல கவிதை வரிகள். பாராடுக்கள். i

மனுநீதி said...

மிக்க நன்றி நிலாமதி

ரவி said...

சிறப்பாக வடிவமைச்சுட்டீங்க, அருமையான கவிதைகள் !!

மனுநீதி said...

பாராட்டுக்கு மிக்க நன்றி ரவி.

Unknown said...

i'm visiting ur blogspot first time. good one.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)